வால்நட் பருப்பில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...!!

Sasikala|
வால்நட் பருப்பில் இருக்கும் இயற்கையான ரசாயனங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, உடலை பல்வேறு வகையான நோய் தொற்றுகளிலிருந்து  காக்கிறது.

வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது. இப்பருப்புகளை தொடர்ந்து உண்ணும் ஆண்களுக்கு தலையில் வழுக்கை ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. 
 
இதயத்தில் ரத்த ஓட்டங்கள் சீராக இருப்பதற்கு வால்நட் பருப்புகள் உதவுகிறது.
 
மூளை செயல்பாடு வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
 
வால்நட்ஸ் பருப்புகளை அடிக்கடி உண்டு வரும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
 
நரம்புகள் பாதிப்புகளால் சிலருக்கு தூக்கமின்மை ஏற்படுகிறது. தினமும் இரவு உணவின் போது வால்நட்ஸ் பருப்புகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு இரவில் நன்கு உறக்கம் ஏற்படும். மன அழுத்தங்களும் குறையும்.
 
பித்தப்பைகளில் சிலருக்கு கற்கள் உருவாகின்றன. அதை கரைப்பதில் வால்நட்ஸ் சிறப்பாக செயல்படுகிறது.
 
நமது உடலின் வெளிப்புற பகுதியான தோல் சிறிது ஈரப்பதத்தோடு இருப்பது ஆரோக்கியமானது. வால்நட்ஸ் பருப்புகள் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோலின்  ஈரப்பதம் வறண்டு போகாமல் பாதுகாக்கப்படுகிறது. தோல் சுருக்கங்களும் தடுக்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :