மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் திடீர் மாற்றம்: பெரும் பரபரப்பு

Last Modified திங்கள், 13 ஜனவரி 2020 (22:33 IST)
தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது குறித்த சர்ச்சை இந்த படம் ஆரம்பத்திலிருந்தே உள்ளது.
இந்தப் படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டு வந்தாலும் இந்த படத்தில் இருந்து அவர் விலகிவிட்டார் என்ற வதந்தியும் தொடர்ந்து பரவி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக இருந்த லலித் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர்கள் தான் இந்த படத்தை தயாரித்து இருப்பதாக கூறப்பட்டது. இது வதந்தி என்று சேவியர் தரப்பிலிருந்து கூறப்பட்டாலும் பின்னர் அது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது
தற்போது இப்படத்தை ஜெகதீஷ் மற்றும் லலித் தான் தான் தயாரித்து வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் வெளியாகும் போது தெரியும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் அனைத்து வியாபாரங்களும் முடிந்து விட்ட நிலையில் படக்குழுவினர் சுறுசுறுப்பாக படத்தை முடிக்கும் ஈடுபட்டுள்ளனர் அடுத்த மாதத்திற்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று படக்குழுவினரிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது
விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :