1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (07:44 IST)

வெப்ப அலை எச்சரிக்கைக்கு நடுவே வந்த மழை செய்தி.. எங்கெல்லாம் மழை பெய்யும்?

Rain
தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்த நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் மழை பெய்யும் இடங்கள் குறித்த தகவலை தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் ஏப்ரல் 28ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் மட்டும் 28ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை தான் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Edited by Siva