வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (09:15 IST)

சென்னையின் முக்கிய பகுதிகளில் 2 நாட்கள் குடிநீர் சப்ளை நிறுத்தம்.. என்ன காரணம்?

water
சென்னை தேனாம்பேட்டை உள்பட முக்கிய பகுதிகளில் இன்றும் நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையின் பல பகுதிகளில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது என்பதும் வேறு சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் மெட்ரோ பணி காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் அதாவது வளசரவாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அம்பத்தூர், ஆலந்தூர், அடையாறு ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

நாளை இரவு 9 மணி வரை குடிநீர் வினியோகம் இருக்காது என்றும் மெட்ரோ பணி முடிந்ததும் நாளை இரவு 9 மணிக்கு மேல் குடிநீர் வினியோகம் வழக்கம்போல் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளில் இரண்டு நாட்கள் குடிநீர் விநியோகம் இல்லை என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva