செவ்வாய், 7 பிப்ரவரி 2023

தின பலன்கள்

மேஷம்: இன்று வீண் அலைச்சல், தடை, தாமதம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம். எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள்...Read More
இன்று காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணம் வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்....Read More
இன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம்....Read More
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள்....Read More
இன்று எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண்...Read More
இன்று டென்ஷன், வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை உண்டாகலாம். குடும்ப பிரச்சனை, தொழில் பிரச்சனை கல்வியில் தடை போன்றவை விலகும். எதிலும் நன்மை உண்டாகும். தந்தையின்...Read More
இன்று பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். தானதர்மம் செய்யவும். ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல...Read More
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது....Read More
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது....Read More
இன்று வேலையில் இழுபறி, வீண் அலைச்சல் போன்றவை ஏற்பட்டு நீங்கும். கவனம் தேவை. எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். வீண் அலைச்சல்...Read More
இன்று எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் ஒருவித கவலை இருக்கும். மாணவர்களுக்கு தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி...Read More
இன்று வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு...Read More

கோவை மாநகராட்சி எடுத்துள்ள முயற்சியால் கோவை நகரம் ஓவிய நகராக மாறி கொண்டு இருக்கிறது. | கோவை மாநகராட்சி எடுத்துள்ள முயற்சியால் கோவை நகரம் ஓவிய நகராக மாறி கொண்டு இருக்கிறது. கோவையில் காந்திபுரம் நஞ்சப்பா சாலை, 100 அடி சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மேம்பால தூண்களில் அரசியல் கட்சி, தனி நபர் உள்ளிட்ட பலர் எச்சரிக்கையையும் மீறி போஸ்டர்கள் ஒட்டுவதால், நகரின் தூய்மை மற்றும் அழகு கெடுவதாக பொதுமக்கள் ஆதங்கப்பட்டு வந்தனர். இதற்கு தீர்வு காணும் வகையாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பால தூண்களில் சிலப்பதிகாரம் மணிமேகலை உள்ளிட்ட ஐம்பெரும் தமிழ் காவியங்களில் வரும் காட்சிகளை ஓவியங்களாக வரைய மாநகராட்சி முடிவு செய்தது. முதற்கட்டமாக கோவை காந்திபுரம் நஞ்

SBI மற்றும் LICல் பொதுமக்களின் முதலீடுகளை அதானிக்கு தாரை வார்த்ததாக கூறி மத்திய அரசை கண்டித்து. | கோவை SBI மற்றும் LICல் பொதுமக்களின் முதலீடுகளை அதானிக்கு தாரை வார்த்ததாக கூறி மத்திய அரசை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் ஆர்ப்பாட்டம். கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள எஸ்பிஐ பிரதான அலுவலகம் முன்பு, எஸ்பிஐ மற்றும் எல்ஐசி யில் பொதுமக்களின் முதலீடுகளை அதானிக்கு மோடி அரசு தாரை வார்த்ததாக கூறியும், மோடி அரசை கண்டித்தும் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடி அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதானிக்கும் அம்பானிக்கும் எல்ஐசி சொத்துக்களை விற்கக் கூடாது, எஸ்பிஐ மற்றும் எல்ஐசி யில் முதலீடு செய்தது நடுத்தர வர்க்கத்தினர் சேமித்த பணம் அதனை விற்கக் கூடாது, கார்ப்பரேட் முதலாளிகளை வளர்க்கக்கூடாது, உள்ளிட்ட கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் கருப்புசாமி, எஸ்பிஐ மற்றும் எல்ஐசி யில் பொதுமக்களின் முதலீடுகளை, மோடியின் நண்பர்களான அதானிக்கும் அம்பானிக்கும் மோசடியாக அவரது நிறுவனங்களில் முதலீடு செய்வதாக கூறி பிற்காலத்தில் அந்தக் கடனை வாராத கடனாக மாற்றி வைப்பதற்காக இந்த மோசடி நடைபெறுகிறது என தெரிவித்தார். பொதுமக்களின் பணத்தை அபகரிக்கும் பிரதமர் மற்றும் மந்திரி சபையின் கூட்டு மோசடியை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார். மேலும் இதில் பிரதமர் ஏ1(குற்றவாளி) எனவும் நிதி அமைச்சர் ஏ2(குற்றவாளி) எனவும் கூறிய அவர் இது குறித்து நிதி அமைச்சர் இடம் விளக்கம் கேட்டால் மலுப்பலாகதான் பதில் அளிக்கிறார் என தெரிவித்தார்.

பெண்களுக்கான வூசு போட்டியில் அதிரடி காட்டி அசத்திய மாணவிகள் | கோவையில் நடைபெற்ற கேலோ இந்தியா தேசிய அளவிலான பெண்களுக்கான வூசு போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக தேசிய அளவிலான பெண்களுக்கான ஜூனியர் வூசு போட்டிகள் கோவையில் நடைபெற்றது.இந்திய மற்றும் தமிழ்நாடு வூசு சங்கம் ,மத்திய அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியோர் இணைந்து நடத்திய இதில்,கர்நாடகா,கேரளா,மணிப்பூர்,ராஜஸ்தான்,டெல்லி,என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.சான்சூ,டாவுலு என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் மாணவிகள் அசத்தலாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் ,பதக்கங்கள் வழங்கப்பட்டது.இதில் தேர்வு செய்யப்படும் வீராங்கனைகள் சர்வதேச அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மதுரையில் அடையாளம் தெரியாத நபரால் இளம் பெண் குத்திக் கொலை | மதுரையில் அடையாளம் தெரியாத நபரால் இளம் பெண் குத்திக் கொலை மதுரை தெற்கு வாசல் சப்பானி கோவில் பகுதியைச் சார்ந்தவர் வர்ஷா. இன்று தன் வீடு அருகே ஹெல்மெட் அணிந்த அடையாளம் தெரியாத நபரால் வர்ஷாவின் உடலில் மூன்று இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். வர்ஷா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி பழனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வர்ஷாவுக்கும் பழனிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வர்ஷா தனது தாய் வீட்டிற்கு மீண்டும் வந்துள்ளார். இந்த நிலையில் இன்று தனது வீடு அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது ஹெல்மெட் அணிந்த அடையாளம் தெரியாத நபரால் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் கத்தியால் குத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு வாசல் போலீசார் வர்ஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் பழனியிடம் விசாரணை மேற்கொள்ள பழனியை தேடி வருகின்றனர்.

வெப் ஸ்டோரி

மேலும் காண்க

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?