1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 26 ஜூலை 2024 (21:42 IST)

கோயம்பேடு - கூடுவாஞ்சேரி, கோயம்பேடு - கிளாம்பாக்கம் மாநகர பேருந்துகள் எண் மாற்றம்..!

MTC-chennai city bus
கோயம்பேடு - கூடுவாஞ்சேரி மற்றும் கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் மாநகர பேருந்துகள் தடம் எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சென்னை கோயம்பேட்டிலிருந்து கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வரும் நிலையில் பேருந்துகள் அடையாளம் கண்டு கொள்ள தடம் எண்ணையும் வழங்கி வருகிறது
அந்த வகையில் கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும்  பேருந்துகள் தடம் எண் 104 சி என்றும், அதைப்போல் கோயம்பேடு  - கூடுவாஞ்சேரி இடையே இயக்கப்படும் பேருந்துகள் தடம் எண் 104 சி என்றும் உள்ளது

இந்த நிலையில் இந்த பேருந்துகளின் புதிய எண்கள் குறித்த தகவல் இதோ:

கோயம்பேடு - கிளாம்பாக்கம் பழைய எண்: 104 சி cut
 கோயம்பேடு - கிளாம்பாக்கம் புதிய எண்: 104 சி

கோயம்பேடு - கூடுவாஞ்சேரி  பழைய எண் 104சி
கோயம்பேடு - கூடுவாஞ்சேரி  புதிய எண் 104சிஎக்ஸ்

பயணிகள் நலனை கருத்தில் கொண்டு இந்த புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  தங்களுக்கு தேவையான பேருந்துகளை சரியான எண்களை கொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva