சுவையான சூப்பரான தஞ்சாவூர் சாம்பார் ஈஸியா செய்யலாம்!

தமிழர்களின் சைவ உணவில் முக்கிய அம்சம் வகிப்பது சாம்பார். அதிலும் தஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் வாசமும், ருசியும் நிறைந்தது. தஞ்சாவூர் சாம்பார் எளிதாக செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Various Source

தேவையானவை: 1 கப் வேகவைத்த துவரம் பருப்பு, 2 தேக்கரண்டி சாம்பார் பொடி, 4 சேப்பங்கிழங்கு, கால் கப் சக்கரை வள்ளிக் கிழங்கு, புளிக்கரைசல்..

தேவையானவை: பரங்கிக்காய், கத்தரிக்காய், குடை மிளகாய், கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், 1 தேக்கரண்டி அரிசி மாவு, உப்பு தேவையான அளவு

சேப்பங்கிழங்கை தனியே தோலை உரித்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.

பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு காய்கறிகள், அவித்த சேப்பங்கிழங்கை போட்டு வதக்க வேண்டும்.

Various Source

வதக்கிய பின்னர் அதில் புளிக்கரைசல், உப்பு, சாம்பார் போடி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.

Various Source

பின்னர் அதில் துவரம் பருப்பு, அரிசி மாவு கரைசலை சேர்ர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

Various Source

பிறகு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து சாம்பாரில் சேர்த்து கொதியுடன் இறக்கினால் மணமணக்கும் தஞ்சாவூர் சாம்பார் ரெடி.