திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2024 (16:48 IST)

இந்தியா எதற்காக பாகிஸ்தான் செல்லவேண்டும்… நம் வீரர்களின் பாதுகாப்புதான் முக்கியம்- ஹர்பஜன் சிங் கருத்து!

8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்து குழப்பமான செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எப்படியும் இந்திய அணி கலந்துகொள்ளும் என கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது மீண்டும் பிசிசிஐ, பாகிஸ்தான் செல்ல முடியாது என ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடத்துமாறும் ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதை ஏற்க மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இன்னும் குழப்பமான சூழலே நிலவி வரும் நிலையில் இந்திய முனனாள் கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ள கருத்து கவனம் ஈர்த்துள்ளது.

அதில் “இந்திய அணி ஏன் பாகிஸ்தான் செல்லவேண்டும்? அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன. ஏதேனும் ஒரு அசம்பாவிதம் அங்கு தினம்தோறும் நடக்கிறது.  இந்திய அணியை அனுப்ப மாட்டோம் என பிசிசிஐ சொல்வது சரியான முடிவு என்றுதான் நினைக்கிறேன். நம் வீரர்களின் பாதுகாப்பை விட வேறு எதுவும் நமக்கு முக்கியம் இல்லை” எனக் கூறியுள்ளார்.