ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 25 ஜூலை 2024 (20:58 IST)

17 நிமிடங்கள் தான்.. முதல் பிரசாரத்திலேயே சிக்சர்கள் அடித்த கமலா ஹாரிஸ்..!

அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தனது முதல் பிரச்சாரத்தை 17 நிமிடம் மட்டும் செய்ததில் அந்த பிரச்சாரத்தில் அவர் அனல் பரக்க பேசியதை அடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் நிலையில் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முந்தி சென்று உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல் பிரச்சாரத்தை தொடங்கிய கமலா ஹாரிஸ் ‘நான் ஒரு வழக்கறிஞர் ஆனால் என்னை எதிர்த்து போட்டியிடும் டிரம்ப் கிரிமினல் குற்றங்களுக்காக நீதிமன்றங்களுக்கு ஓடிக் கொண்டிருப்பவர் என்று முதல் சிக்சர் அடித்தார்.

தேர்தலில் நான் வெற்றி பெற்றால் கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவேன் என்றும் தொழிலாளர் நல சங்க நடைமுறைகளை எளிமைப்படுத்துவேன் என்றும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டுவேன் என்றும் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார்.

டிரம்ப் வெற்றி பெற்றால் அமெரிக்காவை பின்னோக்கி இழுத்து செல்வார் என்றும் நாம் சுதந்திரமான காற்றை சுவாசிக்க வேண்டுமா அல்லது வெறுப்பு பயம் உள்ள தேசத்தில் வாழ வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கமலா ஹாரிஸ் பேசியவுடன் கமலா கமலா என பொதுமக்கள் கரகோஷம் போட்டனர்

இதிலிருந்து கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியான அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva