வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2024 (19:48 IST)

வெற்றிலை போடுவதால் தைராய்டு நோய் குணமாகுமா?

Beetal leaves
வெற்றிலை என்பது ஜீரண சக்திக்கு வழி வகுக்கும் என்றும் பல்வேறு நோய்களை தீர்க்கும் என்றும் கூறப்படும் நிலையில் தைராய்டு பிரச்சனைகளை தீர்க்கும் என்றும் தற்போது கூறப்பட்டு வருகிறது 
 
வெற்றிலை போட்டால் பற்கள் கரையாகும் என்று மருத்துவர்கள் கூறினாலும் வெற்றிலை போடுவது என்பது நோயில்லா வாழ்க்கைக்கு உதவி செய்யும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் 
 
வெற்றிலையில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, கால்சியம் ,வைட்டமின் சி உள்பட பல சத்துக்கள் உள்ளது. சமீபத்தில் வெற்றிலை குறித்து ஆய்வு செய்தபோது அதில் உள்ள சபிக்கால் என்ற பொருள் தைராய்டு நோயை குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
 
மேலும் ஆஸ்துமா தலையில் நீர் கோர்த்தல் உள்ளிட்ட நோய்களுக்கு வெற்றிலை ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. மேலும் வாயுதொல்லையும் வெற்றிலை சாப்பிடுவதால் தீரும் 
வெற்றிலையோடு மிளகு ஏலக்காய் கிராம்பு சாதிக்காய் சேர்த்து சாப்பிடுவது செரிமான சக்தியை இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran