செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 25 ஜூலை 2024 (15:08 IST)

கூகுளுக்கு சவால் விடும் ஆப்பிள் மேப்ஸ்.. பிரவுசரிலும் பயன்படுத்தலாம் என அறிவிப்பு..!

உலகம் முழுவதும் பெரும்பாலானோர் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தி வரும் நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் மேப்ஸ் தற்போது நேரடியாக வெப் பிரவுசரில் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த பீட்டா வெர்ஷன் விரைவில் பயனாளர்களுக்கு பயனாளிக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
மேலும் இந்த ஆப்பிள் மேப்ஸ் என்பது கூகுள் மேப்ஸ்க்கு சவாலை தரும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் மேப் பீட்டா பதிப்பை கூகுள் குரோம் மற்றும் ஆப்பிள் சபாரி பிரவுசரில் பயன்படுத்தலாம் என்றும் இப்போதைக்கு ஆங்கில மொழியில் மட்டும் பயன்படுத்த முடியும் என்றும் பின்னாளில் உலகம் முழுவதும் பல மொழிகளில் இது அறிமுகம் செய்யப்படும் என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.
 
இதற்கு முன்னர் ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமாக மேப்ஸ் இல்லை என்ற நிலையில் தற்போது ஆப்பிள் நிறுவனமே ஆப்பிள் மேப்ஸ் என்ற அதிகாரப்பூர்வமான சொந்த மேப்பை வெளியிட்டுள்ளது.
 
beta.maps.apple.com என்ற இணையதளத்தின் மூலம் ஆப்பிள் மேப்ஸை  பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கூகுள் மேப்பில் இருப்பது போலவே டிரைவிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் உள்ளது என்றும் வரும் நாட்களில் இன்னும் சில புதிய அம்சங்கள் இதில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva