ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 26 ஜூலை 2024 (12:38 IST)

கிடப்பில் போடப்பட்ட மசோதாக்கள்.! ஆளுநர்களுக்கு பறந்த உத்தரவு.! உச்சநீதிமன்றம் அதிரடி ..!!

supreme court
மசோதாகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், பதிலளிக்கும்படி கேரள மற்றும் மேற்கு வங்க மாநில ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
 
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் நியமிக்கப்பட்ட ஆளுர்களுக்கும், அந்த மாநில அரசுகளுக்கும் பல்வேறு கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் ஆளுநர் ரவிக்கும், திமுக தலைமையிலான அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. மத்திய அரசு எதிராக சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாக திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
 
இதேபோல் கேரளா மற்றும் மேற்கு வங்கத்திலும் ஆளுநர்களுக்கும், அம்மாநில அரசுகளுக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. மேற்கு வங்க சட்டசபையில் 8 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஓராண்டுக்கு மேலாக அவற்றை ஆளுநர் நிலுவையில் வைத்து உள்ளதாக மாநில அரசு குற்றம்சாட்டியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. 

 
அதேபோல், கேரள ஆளுநரும் 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்துள்ளதாக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கைகளை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மாநில அரசுகளின் மனு குறித்து பதிலளிக்கும்படி கேரள ஆளுநர் அலுவலகத்திற்கும், மேற்கு வங்க ஆளுநர் அலுவலகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.