வண்டிக்கடை சுண்டல் மசாலா செய்ய !!

Vandi Kadai Sundal Masala
Sasikala|
தேவையான பொருட்கள்: 
 
காய்ந்த பட்டாணி - 200 கிராம் 
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறிய துண்டு 
பூண்டு - 15 பல்
தனியா தூள் - ஒரு ஸ்பூன் 
தனி மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
கரம் மசாலா - அரை ஸ்பூன் 
உப்பு - ஒரு ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன் 
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன் 
சீரகம் - கால் ஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன் 
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து. 

செய்முறை: 
 
முதலில் 200 கிராம் பட்டாணியை தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைத்துவிட வேண்டும். அதன்பின் உறிய பட்டாணியை குக்கரில் சேர்த்து, அதனுடன் பட்டாணி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து குக்கர் 5 விசில் வரும் வரை அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும். 
 
பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை பெரிய துண்டுகளாக அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பூண்டை தோல் உரித்துக் கொண்டு இஞ்சியையும் தோல்நீக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.
 
ஒரு மிக்ஸி ஜாரில் அரிந்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு இவை அனைத்தையும் தண்ணீர் ஏதும் சேர்க்காமல் அப்படியே பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணையை ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். 
 
பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை கடாயில் சேர்த்து மசாலாவிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன்பின் தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். 
 
பிறகு குக்கரை திறந்து வேக வைத்துள்ள பட்டாணியையும் அவற்றில் உள்ள தண்ணீரையும் முழுவதுமாக இதனுடன் சேர்த்து கொள்ளவேண்டும்.பின்னர் இவை நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி விட்டு இறக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான ரோட்டுக்கடை சுண்டல் மசாலா தயார்.


இதில் மேலும் படிக்கவும் :