வாஸ்துப்படி வீட்டின் அறைகள் எங்கு அமைய வேண்டும் தெரியுமா....?

வாஸ்து படி ஒரு வீட்டில் அனைத்து அறைகளும் அமைந்தால், அந்த வீட்டில் நேர்மறை சக்தி அதிக அளவில் இருக்கும் என்று வாஸ்து  சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் ஒரு வீட்டில் எந்த அறையை எங்கு அமைந்தால் நல்லது என்று தெரிந்து கொள்வோம்.
பூஜை அறை என்பது ஒரு வீட்டிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த அறையாகும். பொதுவாக சூரியன் உதயமாகும் சமயத்தில் சூரிய பகவானின் மெல்லிய கதிர்கள் எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு பூஜை அறையை அமைப்பது நல்லது என்று ஆன்றோர்கள்  பலர் கூறுகின்றனர். அதன் படி பார்த்தல் சூரியன் கிழக்கு திசையில் தான் உதிக்கிறது, ஆகையால் வீட்டின் வடகிழக்கு திசையில் பூஜை அறைய அமைப்பது வாஸ்து படி விஷேசம் ஆகும்.
 
பொதுவாக வடகிழக்கு மூலையில் பூஜை அறையை தவிர ஹால் இருக்கலாம். அப்படி வேறு ஏதாவது அறைகள் இருந்தால் அந்த அறையில் தங்குவது உசிதம் அல்ல.
 
பெண்களை பெருத்தவரை சமையல் அறை என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். அவர்கள் பல மணி நேரங்கள் சமையல் அறையில் இருப்பதால் அந்த அறை வாஸ்து படி இருப்பது முக்கியம் ஆகும். ஒரு வீட்டின் சமையல் அறை என்பது வாஸ்து படி தென்கிழக்கு திசையில் இருந்தால் சிறப்பாக இருக்கும். அதுவே அக்கினி பகவானுக்கு உகந்த திசை ஆகும். அதே போல தென்கிழக்கு திசையில் சமையல் அறையை தவிர வேறு அறைகள் இருப்பது நல்லதல்ல. 
 
ஒரு வீட்டின் படுக்கை அறையானது தென்மேற்கு திசையில் இருப்பதே நல்லது. வீட்டின் பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருப்பதே சிறந்தது. இதுவே குபேர மூலை ஆகும். அதே போல வீட்டில் குபேர மூலை சற்று உயர்ந்து இருப்பது நல்லது.


இதில் மேலும் படிக்கவும் :