பயணிகள் சைக்கிளை எடுத்து வரலாம் – மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

கோப்புப் படம்
Last Modified சனி, 15 பிப்ரவரி 2020 (14:19 IST)
கோப்புப் படம்

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இனி பயணிகள் தங்கள் சைக்கிள்களை எடுத்துக் கொண்டு பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் படிப்படியாக மக்களை ஈர்த்து வருகிறது. ஆனால் அதில் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இநிலையில் பயணிகள் இனி ரயிலில் தங்கள் சைக்கிளை எடுத்து செல்ல அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் சைக்கிள் சிறியதாகவும், கையில் எடுத்துச் செல்ல வசதியாகவும் இருக்க வேண்டும். பயணிகள் யாருக்கும் இடையூறு ஏற்படுத்தாமலும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்கு செல்வதற்கு ஆகும் ஆட்டோ அல்லது ஷேர் ஆட்டோ ஆகியவற்றின் செலவைக் குறைக்கலாம் என்பதால் பயணிகள் வரத்து அதிகமாகும் என சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :