வெளியானது ஐபிஎல் முழு அட்டவணை – முதல் போட்டி மும்பையில்!

சென்னை மற்றும் மும்பை அணிகளின் கேப்டன்கள்
சென்னை மற்றும் மும்பை அணிகளின் கேப்டன்கள்
Last Updated: ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (09:07 IST)

ஐபிஎல் 2020 ஆம் ஆண்டுக்கான முழு அட்டவணையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2020 ஆம் ஆண்டுக்கான தொடர் மார்ச் மாதம் 29 ஆம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முழு அட்டவணையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. வழக்கமாக சென்ற ஆண்டு பைனலில் மோதிய அணிகள் தான் முதல் போட்டியில் விளையாடும்.

அதன் படி சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி மும்பையில் வரும் மார்ச் 29 ஆம் தேதி கோலாகலமாக நடக்க உள்ளது. மொத்தம் 56 போட்டிகளாக நடக்கும் லீக் போட்டிகள் மே 17 ஆம் தேதி முடிவடைய உள்ளது.
இதில் மேலும் படிக்கவும் :