1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 8 மே 2024 (18:35 IST)

காங்கிரஸ் உடனான உறவை முறிக்க முதல்வர் ஸ்டாலின் தயாரா? பிரதமர் மோடி கேள்வி

PM Modi
தென்னிந்தியர்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் கருத்தில் கொண்டு காங்கிரஸ் உடனான உறவை தமிழக முதல்வர் ஸ்டாலின் முறித்துக் கொள்வாரா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய போது கிழக்கு இந்தியாவில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும், மேற்லி இந்தியாவில் உள்ளவர்கள் அரேபியர்கள் போலவும், வடக்கு இந்தியாவில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும் , தெற்கு இந்தியாவில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்கள் போலவும் இருப்பதாக கூறியிருந்தார் 
 
இது பெரும் சர்ச்சையாகி உள்ள நிலையில் தென்னிந்தியர்களை சாம் பிட்ரோடா அவமதித்துவிட்டார் என்று கூறப்படும் நிலையில் இது குறித்து பிரதமர் மோடி சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார் 
 
குறிப்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அவர் எழுப்பிய கேள்வியில் தென்னிந்தியர் குறித்து காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா சர்ச்சை கருத்து கூறிய விவகாரத்தை அடுத்து காங்கிரஸ் உடனான உறவை முதல்வர் ஸ்டாலின் முறித்து கொள்வாரா என்று கேள்வி எழுப்பிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி எழுப்பி ஏற்படுத்தி உள்ளது. 
 
பிரதமரின் இந்த கேள்விக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Siva