1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 8 மே 2024 (21:19 IST)

டி 20 போட்டியில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய லக்னோ பேட்ஸ்மேன்கள்… சன் ரைஸர்க்கு எளிய இலக்கு!

தலா 12 புள்ளிகளோடு இருக்கும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் இன்று நடக்கும் முக்கியமான போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே எல் ராகுல் முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி களமிறங்கிய லக்னோ அணி பேட்ஸ்மேன்கள் ஆமை வேகத்தில் விளையாடி பொறுமையை சோதித்தனர். அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் 33 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார்.  அடுத்தடுத்து வந்த நான்கு பேட்ஸ்மேன்களும் இதே போல விளௌயாட ரசிகர்களின் பொறுமையை சோதித்தனர்.

அதன் பின்னர் நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் கொஞ்சம் அதிரடியாக விளையாட ரன்ரேட் சற்று உயர்ந்தது. பூரன் 48 ரன்களும், ஆயுஷ் பதோனி 55 ரன்களும் சேர்க்க, 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் சேர்த்தார். இந்த எளிய இலக்கை சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி எட்டிப் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது