ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 மே 2024 (18:11 IST)

ஒரு படம் ஹிட் அடிச்சிட்டா போதுமே.. சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்திய அனுபமா!

தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக இருந்து வரும் அனுபமா பரமேஸ்வரன் தற்போது தனது சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளாராம்.



மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலமாக தென்னிந்திய சினிமாவில் பெரும் பிரபலமானவர்கள் சாய் பல்லவி, அனுபாமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா செபாஸ்டியன். இதில் சாய் பல்லவி அடுத்தடுத்து ஹிட்டான படங்களை தொட்டு வெற்றிப்பாதையில் பயணித்து வருகிறார். மற்ற இருவருக்கும் பட வாய்ப்புகள் வருவதும் போவதுமாக இருந்து வருகிறது.

பிரேமம் ஹிட்டுக்கு பிறகு தமிழில் தனுஷுடன் ‘கொடி’ படத்தில் நடித்த அனுபமா தொடர்ந்து தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார். ஆனால் அதனால் அவருக்கு பட வாய்ப்புகள் கூடவில்லை. கடந்த ஆண்டில் கன்னடத்தில் வெளியான கார்த்திகேயா-2 படம் ஓரளவு கவனத்தை பெற்றது. ஆனால் தொடர்ந்து இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வந்த அனுபமா தொடர்ந்து க்ளாமர் போட்டோஷூட்டில் இறங்கி ரசிகர்களை கிறங்கடித்து வந்தார். இந்நிலையில் தற்போது தெலுங்கில் அனுபமா நடித்து வெளியான ‘டில்லு ஸ்குவார்’ திரையரங்கிலும், ஓடிடியிலும் செம ஹிட். இதுவரையில்லாத அளவு அந்த படத்தில் தாராளமாக நடித்திருந்தார் அனுபமா.

இந்த படத்தின் ஹிட்டை தொடர்ந்து அனுபமாவுக்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். ஆனால் முக்கால்வாசி கேரக்டர்கள் எல்லாம் க்ளாமர் ரோல்தானாம். அதனால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள முடிவு செய்த அனுபமா பரமேஸ்வரன் தற்போது தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம். மேலும் எல்லா படத்தையும் கமிட் செய்து விடாமல் நடிப்புக்கு நல்ல ஸ்கோப் உள்ள படங்களை மட்டும் நடிக்கலாம் என்றிருக்கிறாராம்.

Edit by Prasanth.K