வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 மே 2024 (16:52 IST)

மிதக்கும் கப்பலில் ஹோட்டல்.. சென்னையில் விரைவில் அறிமுகம்..!

சென்னையில் விரைவில் மிதக்கும் கப்பல் ஹோட்டல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
உலகின் பல பகுதிகளில் ஏற்கனவே மிதக்கும் கப்பல் ஹோட்டல் இயங்கி வருகிறது என்பதும் இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள முட்டுக்காடு என்ற பகுதியில் மிதவை உணவு கப்பல் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது 
 
பொது மக்களுக்கான கட்டணங்கள் நிர்ணயம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அந்த பணிகள் முடிவடைந்த பிறகு மிதவை உணவு கப்பலில் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது 
 
இந்த மிதவை உணவு கப்பல் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டால் சென்னை மக்கள் ஒரு புதிய அனுபவத்தோடு கப்பலில் மிதந்து கொண்டே உணவை சாப்பிடலாம் என்பதும் இது சென்னை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran