திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 8 மே 2024 (16:22 IST)

வினோத வழக்கு.! மனுதாரராக கடவுள் ஆஞ்சநேயர் சேர்ப்பு.! அபராதம் விதித்த நீதிமன்றம்..!

Delhi Court
கோவில் தொடர்பான வழக்கில், கடவுள் ஆஞ்சநேயரையும் மனுதாரராக சேர்த்தவருக்கு டில்லி உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
 
டில்லி உத்தம் நகர் பகுதியில் தனியார் நிலத்தில் கோவில் கட்டப்பட்டது. இது தொடர்பாக டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை தொடர்ந்த அங்கித் மிஸ்ரா என்பவர், அந்த சொத்தில் உள்ள கோவில் பொது மக்களுக்கு சொந்தமானது என்பதால், இந்த நிலம் கடவுள் ஆஞ்சநேயருக்கு சொந்தமானது எனக்கூறி, ஆஞ்சநேயரையும் ஒரு மனுதாரராக சேர்த்து இருந்தார்.

 
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரின் இந்த செயல், சட்ட நடவடிக்கையை துஷ்பிரயோகம் செய்யக் கூடியது என்று தெரிவித்தது. மோசமான மற்றும் தீங்கு விளைவிக்கும் நடைமுறை எனக்கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.