ஞாயிறு, 8 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 மே 2024 (13:28 IST)

இந்த பக்கம் பேச்சுவார்த்தை.. அந்த பக்கம் தாக்குதல்! – இஸ்ரேல் – ஹமாஸ் செயலால் தொடரும் பரபரப்பு!

Israel Hamas attack
காசாவில் போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கும்போதே ரபா நகரை இஸ்ரேல் படைகள் தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் இடையே கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்களும் கொல்லப்பட்ட நிலையில் தப்பித்தவர்கள் காசாவிலிருந்து சென்று ரபா நகரில் தஞ்சமடைந்துள்ளனர். ஆனால் ரபாவையும் இஸ்ரேல் கடந்த சில காலமாக தொடர்ந்து தாக்கி வருகிறது. இதற்கு முன்னதாக அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு முயற்சித்தபோது இஸ்ரேல் அதற்கு பிடிக்கொடுக்கவில்லை.

இந்நிலையில் தற்போது எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் இணைந்து முன்மொழிந்துள்ள அமைதி பேச்சுவார்த்தை ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் சம்மந்தம் தெரிவித்துள்ளனர். ஆனால் இஸ்ரேல் தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்து வருகிறது. இந்நிலையில் அடுத்தக்கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது.

ஆனால் ரபா நகரில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளதாக இஸ்ரேல் அப்பகுதியில் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. பதிலுக்கு ஹமாஸ் அமைப்பும் தெற்கு இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை வீசி தாக்கியதாக ஹமாஸ் ஆதரவு அமைப்பான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு தெரிவித்துள்ளது. ஒரு பக்கம் அமைதி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மறுபக்கம் போரையும் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இழப்பு அதிகரிக்கும் என சர்வதேச அமைப்புகள் எச்சரிக்கை செய்துள்ளன.