1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 8 மே 2024 (15:47 IST)

வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்..! 10 நாட்களில் 400 பேர் பாதிப்பு..!!

Mysterious Fever
டெல்லி காசியாபாத்தில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
டெல்லி காசியாபாத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. ஒருவர் பின் ஒருவராக மக்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களில் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். கடும் வயிற்று வலி, வாந்தி, தலைவலி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
தகவல் அறிந்து சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள், அந்த சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 15 தண்ணீர் மாதிரிகளை சேகரித்துள்ளனர். தண்ணீர் பிரச்னை காரணமாக இந்த தொற்று பரவுகிறதா என்பதை கண்டுபிடிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கடந்த 3 நாட்களில் மட்டும் ஏராளமான மக்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் காலநிலை மாற்றம் மற்றும் வெப்பம் காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுவதாக தாங்கள் உணர்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.