செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 மே 2024 (18:51 IST)

உண்மையான வந்தேறிகளின் வாரிசு யார் தெரியுமா? – சாம் பிட்ரோடாவுக்கு அண்ணாமலை கொடுத்த பதில்!

Annamalai
இந்திய மக்கள் குறித்து காங்கிரஸ் ஓவர்சீஸ் தலைவர் சாம் பிட்ரோடா பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், அவரது பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் பேசியுள்ளார்.



மக்களவை தேர்தல் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் பாஜக – காங்கிரஸ் இடையேயான வார்த்தை மோதலும் தடித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் ஓவர்சீஸ் தலைவராக உள்ள சாம் பிட்ரோடா வீடியோ ஒன்றில், இந்தியாவில் வசிப்பவர்கள் ஒவ்வொரு திசையில் உள்ளவர்களும் வெவ்வேறு நாட்டு மக்களை போல உள்ளதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெற்கில் உள்ள மக்கள் ஆப்பிரிக்கர்களை போல இருப்பதாக அவர் பேசியது தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களை தாழ்வுப்படுத்தும் விதமாக உள்ளதாக பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் சாம் பிட்ரோடா பேசியது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “இது சாம் பிட்ரோடாவின் கருத்து மட்டுமல்ல. அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்களே இந்தியாவில் வாழ்பவர்கள் எல்லாம் வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்தேறிகளாக வந்து இங்கு நுழைந்தவர்கள் என்றுதான் நினைக்கின்றனர். இது உண்மையில் அருவருக்கத்தக்கது. ஆனால் மக்கள் ஒரு சீனர் போலவோ, ஆப்பிரிக்கர் போலவோ தோற்றமளிப்பது கேவலமானது அல்ல. அவர்களும் மனிதர்களே. ஆனால் காங்கிரஸில் இருப்பவர்கள்தான் உண்மையாகவே வந்தேறிகளின் வாரிசுகள். ஒருவர் இத்தாலியில் அமர்ந்துக் கொள்கிறார். மற்றொருவர் லண்டனில். இப்போது பேசும் இந்த சாம் கூட அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டுதான் பேசிக் கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K