1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 8 மே 2024 (20:57 IST)

தேவையில்லாம பேசி பதவி இழந்த சாம் பிட்ரோடா.! காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை.!!

Sam Pitroda
நிறவெறியை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததால் காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் பதவியை சாம் பிட்ரோடா ராஜினாமா செய்தார்.

உலகின் ஜனநாயகத்துக்கு இந்தியா ஓர் சிறந்த உதாரணம் என்றும் நாட்டின் கிழக்கில் உள்ள மக்கள் சீனர்களை போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களை போலவும், வடக்கில் உள்ள மக்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என்று இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தொழிலதிபருமான சாம் பிட்ரோடா தெரிவித்திருந்தார்.
 
அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவிய நிலையில், நாட்டில் நிறவெறியை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்து வருவதாக கண்டனங்கள் எழுந்தன. நாட்டு மக்களை  நிறத்தின் அடிப்படையில் அவமரியாதை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் மோடியும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

 
சாம் பிட்ரோடாவின்  பேச்சு நடைபெற உள்ள பல கட்ட தேர்தல்களில் எதிரொலிக்கும் என்பதாலும், காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு அணி பொறுப்பாளர் பதவியை இன்று சாம் பிட்ரோடா ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஏற்றுக்கொண்டதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.