கண் பார்வை ஆரோக்கியம் என்பது எல்லாருக்கும் அவசியமான ஒன்று. வெயில் நேரங்களில் கண்பார்வையை ஆரோக்கியமாக வைக்க சில எளிய வழிகளை இங்கே காணலாம்.
Various Source
நல்ல கண் பார்வை பெற தினசரி 7 – 8 மணி நேரம் நன்றாக தூங்குவது அவசியம். இதனால் கண்கள் நல்ல ஓய்வை பெறுவது ஆரோக்கியமாக இருக்கும்.
மொபைல், கணினி உள்ளிட்ட டிஜிட்டல் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் டிஜிட்டல் திரை வெளிச்சத்தை பார்ப்பது கண் விழித்திரைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
தினமும் இருவேளை உள்ளங்கைகளால் கண்களை மூடிக் கொண்டு சில நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.
கண் பார்வையை மேம்படுத்தும் மீன், கேரட், பப்பாளி போன்ற உணவுகளை அவ்வபோது எடுத்துக் கொள்ள வேண்டும்.
Various Source
கண்ணை கூசும் வெயில் வெளியே சென்றால் கூலிங் க்ளாஸ் போன்றவற்றை அணிந்து கொள்ள வேண்டும்.
இரவு நேரங்களில் முக்கியமாக நள்ளிரவு நேரங்களில் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
தினசரி இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் சூட்டை குறைப்பதுடன், கண் நரம்புகள் சிறப்பாக செயல்பட உதவும்.