1. இதர வாசிப்பு
  2. »
  3. ‌சிற‌ப்புக‌ள்
  4. »
  5. 2011 ஒரு பா‌ர்வை
  6. 2011ஆ‌‌ம் ஆ‌ண்டி‌ல் இ‌ந்‌தியா!

2011 India Retrospect | 2011ஆ‌‌ம் ஆ‌ண்டி‌ல் இ‌ந்‌தியா!

2011 இந்தியா
2011 ஆம் ஆண்டில் இந்திய அளவில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை திரும்பி பார்க்கும் ஒரு தொகுப்பு:

1) கருப்பு பண குற்றவாளிகள் பெயரை வெளியிட அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள குற்றவாளிகள் பற்றிய பெயர் விவரங்களை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

2) 2ஜி அலைக்கற்றை முறைகேடு: ஆ.இராசா கைது

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திவரும் மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ), தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவை கைது செய்துள்ளது...

3) காம‌ன்வெ‌ல்‌த் ஊழ‌‌‌லி‌ல் க‌ல்மாடி கைத

காம‌ன்வெ‌ல்‌த் போ‌ட்டி‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்ட முறைகேடு தொட‌ர்பாக அத‌ன் ஒரு‌ங்‌கிணை‌ப்பாளராக இரு‌ந்த சுரே‌ஷ் க‌ல்மாடியை ம‌த்‌திய புலனா‌ய்வு கழக‌த்‌தின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்...

4) மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு கால இடதுசாரி ஆட்சிக்கு முடிவுக்கு வந்தத

மேற்குவங்கத்தில் தொடர்ந்து 34 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து வந்த இடதுசாரி கூட்டணி அரசை எதிர்பார்த்தபடியே பதவியிலிருந்து அகற்றி உள்ளார் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி.

5)கனிமொழி கைது; சிறையில் அடைக்கப்பட்டார

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் பிணைய விடுதலை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவரும், கலைஞர் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குனர் சரத் குமாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

6) புட்டபர்த்தி சாய்பாபா காலமானார

மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புட்டபர்த்தி சாய்பாபா இன்று காலமானார்...

7) காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார் பாபா ராம்தேவ

கறுப்பு பணம், ஊழலுக்கு எதிராக யோகா குரு பாபா ரா‌ம்தே‌வ் இ‌ன்று காலை காலவரைய‌ற்ற உ‌ண்ண‌ா‌விரத போரா‌ட்ட‌த்தை தொட‌ங்‌கியு‌ள்ளா‌ர்.

8) அண்ணா ஹசாரே திகார் சிறையில் அடைப்ப

அரசு பணிக்கு இடையூறு விளைவித்ததாக கூறி அண்ணா ஹசாரேவை 7 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்த்ரவிட்டதைத் தொடர்ந்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

9) மும்பையில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு; 8 பேர் பலி; காயம் 70

மும்பையில் இன்று அடுத்தடுத்து 3 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதோடு, 70 பேர் காயமடைந்துள்ளனர்...

10) டெ‌ல்‌லி உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அருகே கு‌ண்டுவெடி‌ப்பு - 12 பே‌ர் ப‌லி

டெ‌ல்‌லி உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அருகே நட‌ந்த கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 12 பே‌ர் ப‌லியா‌கி உ‌ள்ளன‌ர். 60 க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் படுகாய‌ம் அடை‌ந்து‌ள்ளன‌ர்...

11) எடியூரப்பா கைது; 14 நாள் காவலில் வைக்க உத்தரவு!

நில ஊழல் வழக்கில் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் சரணடைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை இம்மாதம் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது...

12) இ‌ந்‌‌தியா வரு‌கிறா‌ர் ஹிலாரி கிளிண்டன

2 நா‌ள் பயணமாக அமெரிக்க அயலுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் ஹிலாரி கிளிண்டன் இன்று டெல்லி வருகிறார்...

13) மத்திய அமைச்சர் பவார் கன்னத்தில் இளைஞர் கொடுத்த பளார்!

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் சரத் பவாரை இளைஞர் ஒருவர் திடீரென கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது...

14) கொல்கத்தா மருத்துவமனையில் தீ விபத்து; 73 பேர் பலி

கொல்கத்தாவில் உள்ள ஏஎம்ஆர்ஐ என்ற தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 73 பேர் பலியாகினர்...

15) நாடாளுமன்றத்தில் புதிய லோக்பால் மசோதா தாக்கல

மக்களவையில் திருத்தப்பட்ட புதிய லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.