Anna Hazare sent to Tihar jail | அண்ணா ஹசாரே திகார் சிறையில் அடைப்பு
அரசு பணிக்கு இடையூறு விளைவித்ததாக கூறி அண்ணா ஹசாரேவை 7 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்த்ரவிட்டதைத் தொடர்ந்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிணையில் விடுவதற்கான தனி நபர் உறுதி மொழி பத்திரம் அளிக்க ஹசாரே மறுப்பு தெரிவித்ததையடுத்து, அவர் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டதாக டெல்லி காவல்துறை ஆணையர் பி.கே. குப்தா தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஹசாரே, அங்கும் தமது உண்ணாவிரதத்தை தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி, அண்ணா ஹசாரே இன்று முதல் டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.
ஆனால் காவல்துறை விதித்த 6 நிபந்தனைகளை அவர் ஏற்க மறுத்ததோடு,தடையை மீறி உண்ணாவிரதம் இருக்கபோவதாக அறிவித்திருந்தார்.
எனினும் இன்று காலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.அவருடன் அரவிந்த் கேஜ்ரிவல், கிரண் பேடி மற்றும் சாந்தி பூஷண் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
வடக்கு டெல்லியில் உள்ள காவல்துறை அலுவலகத்துக்கு ஹசாரே கொண்டுசெல்லப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார்.
அப்போதிலிருந்து அவர் தண்ணீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதாக அவரது குழுவினர் தெரிவித்தனர்.