1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
  6. புட்டபர்த்தி சாய்பாபா காலமானார்: புத‌ன்‌கிழமை உட‌ல் அட‌க்க‌ம்

Puttaparthi Saibaba Passes Away | புட்டபர்த்தி சாய்பாபா காலமானார்: புத‌ன்‌கிழமை உட‌ல் அட‌க்க‌ம்

புட்டபர்த்தி சாய்பாபா காலமானார்
மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புட்டபர்த்தி சாய்பாபா இன்று காலை காலமானார்.

மூச்சுத் திணறல் காரணமாக சாய்பாபா அறக்கட்டளையின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 86 வயதான சாய்பாபா கடந்த 28 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனளிக்காமல் சாய்பாபாவின் ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை 7.40 மணியளவில் சாய்பாபா உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாய்பாபா மறைவிற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆ‌ந்‌திர முத‌ல்வ‌ர் உ‌ட்பட அமை‌ச்ச‌ர்க‌ள், எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள் என அனைவரு‌ம் அ‌ஞ்ச‌லி செலு‌த்த பு‌ட்டபர்‌த்‌தி செ‌ன்று‌ள்ளன‌ர்.

சாய்பாபாவின் உடல் இன்று மாலை 6 மணி முதல் இரண்டு நாட்களுக்கு பொது மக்கள் அஞ்சலிக்காக கு‌ல்வ‌‌‌‌ந் அர‌ங்‌கி‌ல் வைக்கப்படுகிறது. இர‌ண்டு நா‌ட்க‌ள் அ‌ஞ்ச‌லி‌க்கு‌ப் ‌பிறகு புத‌ன்‌கிழமை சா‌‌ய்பாபா உட‌ல் அட‌க்க‌ம் நடைபெறவு‌ள்ளது.

தனது உடலை அட‌க்க‌ம் செ‌ய்ய சா‌ய்பாபா ஏ‌ற்கனவே இட‌த்தை‌க் கு‌றி‌ப்‌பி‌‌ட்டு‌க் கொடு‌த்‌திரு‌ந்தா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
About Writer
Webdunia