1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார் பாபா ராம்தேவ்

கறுப்பு பணம்
கறுப்பு பணம், ஊழலுக்கு எதிராக யோகா குரு பாபா ரா‌ம்தே‌வ் இ‌ன்று காலை காலவரைய‌ற்ற உ‌ண்ண‌ா‌விரத போரா‌ட்ட‌த்தை தொட‌ங்‌கியு‌ள்ளா‌ர்.

டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வரு‌ம் உ‌ண்ண‌ா‌விரத‌த்‌தி‌ல் அவருட‌ன் பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் ப‌ங்கே‌ற்று‌ள்ளன‌ர்.

கறு‌ப்பு பண‌த்தை ‌மீ‌ட்க கடுமையான ச‌ட்ட‌ங்க‌ள் தேவை, ஊழ‌ல்வா‌‌திகளை த‌ண்டி‌க்க ‌விரைவு ‌நீ‌திம‌ன்ற‌ம் அமை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற கோ‌‌ரி‌க்கைகளை வ‌லியுறு‌த்‌தி ரா‌ம்தே‌வ் காலவரைய‌ற்ற உ‌ண்ணா‌விரத போரா‌ட்‌ட‌த்தை தொட‌ங்‌கியு‌ள்ளா‌ர்.

அ‌ப்போது பே‌சிய ரா‌ம்தே‌வ், த‌ங்க‌ள் கோ‌ரி‌க்கை க‌ள் நிறைவேறு‌ம் வரை போரா‌ட்‌‌ட‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌பி‌ன்வா‌ங்க‌‌ப் போவ‌தி‌ல்லை எ‌ன்றா‌ர்.

கறு‌ப்பு பண ‌விவகார‌ம் ச‌ர்வதேச அள‌வி‌ல் இ‌ந்‌தியாவ‌ி‌ற்கு ‌மிக‌ப்பெ‌ரிய அவ‌ப்பெயரை தேடி‌த்தருவதாக ரா‌ம்தே‌வ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

அய‌ல்ந‌ா‌ட்டி‌ல் வ‌சி‌க்கு‌‌ம் இ‌ந்‌திய‌ர்க‌ள் தாய‌க‌ம் ‌திரு‌‌ம்‌பி இ‌ங்கு தொ‌ழில‌் தொட‌ங்க வே‌ண்‌டு‌‌ம் எ‌ன்று‌ம் அ‌வ‌ர் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

உ‌ண்ண‌ா‌விரத‌த்த‌ி‌ல் ப‌ங்கே‌ற்பத‌ற்காக நாடு முழுவது‌ம் இரு‌ந்து அவரது தொ‌ண்ட‌ர்க‌ள் கு‌வி‌ந்து‌ள்ளன‌ர். இதனா‌ல் ஏராளமான காவல‌ர்க‌ள் பாதுகா‌ப்பு ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.