3 bomb blasts in Mumbai; 8 killed, 70 injured | மும்பையில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு; 8 பேர் பலி; காயம் 70
மும்பையில் இன்று அடுத்தடுத்து 3 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதோடு, 70 பேர் காயமடைந்துள்ளனர்.
இரவு 7.10 மணியளவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த தாதர், ஜவேரி பஜார் மற்றும் ஒபேரா ஹவுஸ் ஆகிய இடங்களில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்துள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வண்டிகளும் அங்கு விரைந்துள்ளன.
குண்டுவெடிப்பை தொடர்ந்து மும்பை முழுவதும் மக்களிடையே பதட்டமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.
நகர் முழுவதும் காவல்துறை பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே குண்டுவெடிப்பு குறித்த தகவலறிந்து, மத்திய உள்துறை செயலர் ஆர்.கே. சிங், மகாராஷ்ட்ரா மாநில காவல்துறை டிஜிபி-யை தொடர்புகொண்டு பேசினார்.
முதல் குண்டுவெடிப்பு ஜவேரி பஜாரில் இரவு 7.10 மணி அளவிலும், இரண்டாவது குண்டுவெடிப்பு தாதர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த டேக்ஸி ஒன்றிலும் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடித்தது எந்த வகையான குண்டு என்பது குறித்து உடனடியாக எதுவும் கூற இயலவில்லை என்றும், அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்த மும்பை காவல்துறை உயரதிகாரி ஒருவர், தாதரில் நடந்த குண்டுவெடிப்பு இடத்தில் டிபன் பாக்ஸ் ஒன்று கிடந்ததாக தெரியவந்துள்ளதாகவும், எனவே வெடித்தது டிபன் பாக்ஸ் வெடிகுண்டா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதனிடையே இந்த குண்டுவெடிப்பை தீவிரவாதிகளே நிகழ்த்தியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் குண்டுவெடிப்பை தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.