Youth Slaps Agriculture Minister Sharad Pawar in Delhi | மத்திய அமைச்சர் பவார் கன்னத்தில் இளைஞர் கொடுத்த பளார்!
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் சரத் பவாரை இளைஞர் ஒருவர் திடீரென கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அமைச்சர் சரத் பவார் இன்று டெல்லி மாநகராட்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தார்.
நிகழ்ச்சி முடிந்து அரங்கிலிருந்து பவார் வெளியே வந்தபோது சீக்கிய இளைஞர் ஒருவர் திடீரென அவரது கன்னத்தில் அறைந்தார்.இதனால் பவாரும், அங்கிருந்தவர்களும் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தனர்.
இளைஞர் கன்னத்தில் அடித்ததால், ஒரு நிமிடம் நிலைகுலைந்துபோன பவார், பின்னர் சுதாரித்துக்கொண்டு வெளியே காத்திருந்த தமது காரை நோக்கி சென்றார்.
இதனிடையே பவாரை நோக்கி " நீ ஒரு ஊழல் பேர்வழி" என்று கத்திய அந்த இளைஞரை தனியார் செக்யூரிட்டி ஆட்கள் மடக்கி பிடித்த நிலையில்,அதிகாரி ஒருவர் அந்த இளைஞருக்கு சில குத்துக்களை விட்டார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த இளைஞரை கைது செய்து அழைத்து சென்றனர்.
நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல்களால் வெறுப்படைந்ததால் அமைச்சரை அடித்ததாக அவர் குறிப்பிட்டார். விளம்பரத்துக்காக நான் இதைச் செய்யவில்லை என்று கூறிய அவர், ஆயுதம் மட்டும் இன்று நான் எடுத்து வந்திருந்தால் அவரைக் கொன்றிருப்பேன் என ஆவேசத்துடன் கூறினார்.
அமைச்சரை அடித்ததற்காக ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. சனிக்கிழமையன்று முன்னாள் அமைச்சர் சுக்ராமையும் நான்தான் அடித்தேன் என அவர் தெரிவித்தார்.
பவாரை திடீரென இளைஞர் ஒருவர் கன்னத்தில் அடித்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இந்த தாக்குதல் குறித்து பவாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்றார்.
அதே சமயம் தாக்கிய அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுப்பதா வேண்டாமா என்பதை போலீசாரே முடிவு செய்துகொள்ளட்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.