1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
  6. 34 ஆண்டு கால இடதுசாரி ஆட்சிக்கு முடிவுகட்டிய மம்தா!

WB: Mamata set to come power: | 34 ஆண்டு கால இடதுசாரி ஆட்சிக்கு முடிவுகட்டிய மம்தா!

மேற்குவங்கம்
மேற்குவங்கத்தில் தொடர்ந்து 34 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து வந்த இடதுசாரி கூட்டணி அரசை எதிர்பார்த்தபடியே பதவியிலிருந்து அகற்றி உள்ளார் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி.

மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 215 தொகுதிகள் வரை முன்னணியில் உள்ளது அவரது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி.

ஆளும் இடதுசாரி கூட்டணி 70 தொகுதிகளில் மட்டுமே முன்னணியில் உள்ளது.

இடதுசாரி கூட்டணி அரசை அகற்ற வேண்டும் என்று கடந்த 10 ஆண்டு காலத்திற்கும் மேலாகவே தீவிரமாக போராடி வருபவர் மம்தா.

அதிலும் சிங்கூரில் டாடா கார் தொழிற்சாலைக்காகவும், நந்திகிராமில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காகவும் விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்துவதற்கு கிளம்பிய எதிர்ப்பை அடக்க,புத்ததேவ் அரசு காவல்துறையை ஏவி விட்டு நடத்திய அராஜக போக்குதான்,மேற்குவங்கத்தில் இடதுசாரி கூட்டணி அரசுக்கு வீழ்ச்சியடைய பிள்ளையார் சுழி போட்டது என்றே கூறலாம்.

அதற்கு அடுத்தபடியாக 34 ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தபோதும், குறிப்பிடும்படியான வளர்ச்சி திட்டங்கள் எதையும் மேற்கொள்ளாதது மக்கள் கோபத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் தேர்தலில் பெற்றுள்ள அபார வெற்றியை தொடர்ந்து, மம்தா தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மேற்குவங்க முதல்வர் பதவியை ஏற்க உள்ளார்.