கருப்பு பண குற்றவாளிகள் பெயரை வெளியிட அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள குற்றவாளிகள் பற்றிய பெயர் விவரங்களை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கு விசாரணையின்போது கருப்பு பணத்தை பதுக்கியுள்ளவர்களை பற்றிய விவரங்களை தெரிவிக்காமல்,மத்திய அரசு அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக நீதிமன்றம் ஏற்கனவே குற்றம்சாற்றியிருந்தது.
ஆனால் வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் பெயர் விவரங்களை வெளியிட முடியாது மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மேற்கூறிய வழக்கு,இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது,வெளிநாடுகளில் பணத்தை முதலீடு செய்தவர்கள் மற்றும் பதுக்கி வைத்துள்ள பிரச்சனையில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை மற்றும் நடவடிக்கை விவரங்களை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
அத்துடன் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் பெயர் விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,"யார் அந்த குற்றவாளிகள்? அந்த கருப்பு பணத்திற்கான உண்மையான வருவாய் ஆதாரம் எது?" என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்றும் கடுமையாக கூறினார்கள்.
மேலும் இந்த விடயத்தில் மத்திய அரசு வெளிநாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களைப் பற்றிதான் பேசுகிறதே தவிர, வரி செலுத்தாதது பற்றியோ அல்லது எப்படி அந்த வருமானம் கிடைத்தது என்பது குறித்தோ பேசுவதில்லை என்றும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அந்த (கருப்பு) பணம் எங்கே பயன்படுத்தப்படுகிறது? என்ற கேள்வியையும் எழுப்பினர்.