Kolkata: 73 Killed in Amri Hospital Fire | கொல்கத்தா மருத்துவமனை தீ விபத்து பலி 73 ஆனது
கொல்கத்தாவில் உள்ள ஏஎம்ஆர்ஐ என்ற தனியார் மருத்துவமனையில் இன்று நிகழ்ந்த தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை இந்த தீ விபத்து ஏற்பட்டபோது மருத்துவமனையில் சுமார் 160 பேர் இருந்ததாகவும்,ஆனால் அவர்களை காப்பாற்ற மருத்துவமனை நிர்வாகம் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஏழு அடுக்குமாடி கொண்ட இந்த மருத்துவமனையில் பாதுகாப்பு விதிமுறைகள் ஏதும் பின்பற்றப்படவில்லை என்று தெரியவந்துள்ள நிலையில், இது மன்னிக்க முடியாத குற்றம் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இந்த மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ள அவர், தவறுக்கு காரணமானவர்கள் மீது கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் தரைதளத்தில்தான் முதலில் தீப்பிடித்ததாகவும், அங்கு எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தும், தீயணைப்பு படையினர் மிக தாமதமாக அதிகாலை 5.30 மணி அளவிலேயே வந்ததாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டதுமே மருத்துவமனை வளாகம் முழுவதும் ஒரே கூச்சல் குழப்பம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களும், அவர்களை கவனிக்க வந்த உறவினர்களும் அங்குமிங்குமாக ஓடினர்.
பல இடங்களில் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் புகை மூட்டத்தில் சிக்கி மூச்சு திணறி பலர் பலியானதாகவும், இதுவே பலி எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்ததாகவும் தெரியவந்துள்ளது.