Government Tables Lokpal Bill in lok Sabha | நாடாளுமன்றத்தில் புதிய லோக்பால் மசோதா தாக்கல்
மக்களவையில் திருத்தப்பட்ட புதிய லோக்பால் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.
பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பழைய லோக்பால் மசோதாவை திரும்ப பெற்றுக்கொண்டு, புதிய லோக்பால் மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்தார்.
லோக்பால் மசோதா தொடர்பாக மக்களவையில் விவாதம் தொடங்கியுள்ளது. மசோதா மீது எம்.பி.க்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக லோக்பால் மசோதாவில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளித்துள்ளதற்கு பா.ஜனதா உறுப்பினர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகின்றனர்.
இதனிடையே இந்த மசோதா குறித்து கருத்து தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால் வலுவான லோக்பால் மசோதாவை அரசு விரும்பவில்லை என தெரிவித்தார்.
இப்போது கொண்டுவந்துள்ள மசோதா முன்பு முன்மொழியப்பட்டதைவிட மிகவும் மோசமானது என அவர் குறிப்பிட்டார்.