டெல்லி உயர் நீதிமன்றம் அருகே குண்டுவெடிப்பு - 12 பேர் பலி
டெல்லி உயர் நீதிமன்றம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் பலியாகி உள்ளனர். 60 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
எப்போதும் பரபரப்புடன் காணப்படும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் 5வது நுழைவு வாயில் அருகே இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
பலத்த சத்தத்துடன் இந்த குண்டுவெடித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்பட 12 பேர் பலியாகியுள்ளனர். 60 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்தும் காவல்துறையினர் வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் யார் என்று தெரியவில்லை.
தடயவியல், வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர்.
குண்டுவெடிப்பை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.