1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Fake Books Procured During DMK Regime Removed from Kovai Library

திமுக ஆட்சியில் கொள்முதல் செய்த போலி நூல்கள் அகற்றம்! பெட்டியில் வைத்து பாதுகாக்க உத்தரவு...

கோவை நூலக முறைகேடு
கோவையில் புதிதாக திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்தில், புத்தக கொள்முதலில் மிகப்பெரிய அளவிலான நிதி முறைகேடு நடந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலி எழுத்தாளர்களின் பெயர்களில் தயாரிக்கப்பட்ட தகுதியற்ற மற்றும் போலியான நூல்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டு இங்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
குறிப்பாக, 'அகல்விளக்கு' பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட 1,800 நூல்களில் இலக்கண பிழைகள், வரலாற்று பிழைகள் மற்றும் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருந்தார். இதேபோன்று, 'பீனிக்ஸ்' பதிப்பகத்தால் வழங்கப்பட்ட புத்தகங்களும் நூலகத்தில் வைக்க தகுதியற்றவை என தெரியவந்தது.
 
இந்த நூலக முறைகேடு குறித்து தனிக்குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கோவை அறிவுலகத்தில் வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றியுள்ளனர்.
 
அகற்றப்பட்ட இந்த நூல்கள் இனி வாசகர்களின் பார்வைக்கு வைக்கப்படாது என்றும், முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழலுக்கு முக்கிய ஆதாரமாக அவை பெட்டிகளில் அடைத்து பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
கோவை நூலக முறைகேடு தொடர்பாக ஸ்டாலின் பேசாதது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி!