தீபாவளியை வீட்டிலேயே கொண்டாடுங்கள்.. சென்னை உள்பட 27 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை...
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை உட்பட தமிழகத்தின் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, காற்று இடையூறு ஏற்பட்டுத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் கடலூர், சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், நீலகிரி, கோவை, விருதுநகர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.

