1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thirumavalavan Clarifies on Minister Rajmohan Speech Regarding Alliance Support

யாருடைய தயவிலும் தவெக ஆட்சி இல்லை.. அமைச்சர் ராஜ்மோகன் கருத்துக்கு திருமாவளவன் பதிலடி..

thirumavalavan
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பயணிகள் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், அமைச்சர் ராஜ்மோகனின் பேச்சு குறித்து முக்கிய விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் யாருடைய தயவிலும் ஆட்சி நடைபெறவில்லை, மக்களின் தயவில்தான் ஆட்சி நடக்கிறது என அமைச்சர் ராஜ்மோகன் பேசியது பெரும் விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், இதுகுறித்து திருமாவளவன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
 
மக்கள் தவெகவிற்கு பெரும்பான்மை இடங்களை வழங்கி வெற்றி பெற செய்துள்ளதாகவும், அந்த அடிப்படையில்தான் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களுக்குக் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற தோழமைக் கட்சிகள் கைகோர்த்து ஆதரவளித்து வருவதாகவும் அவர் கூறினார். மக்கள் அளித்த பெரும்பான்மையை மையப்படுத்தியே அமைச்சர் அவ்வாறு பேசியிருப்பாரே தவிர, தோழமை கட்சிகளின் ஆதரவை புறந்தள்ளும் நோக்கில் அவர் பேசியிருக்க வாய்ப்பில்லை என திருமாவளவன் விளக்கம் அளித்தார்.
 
மேலும், கூட்டணிக்கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தாங்கள் ஆட்சியை நடத்துகிறோம் என்ற பொருளில் அமைச்சர் கூறியிருக்க மாட்டார் என்றும், இந்த விவகாரத்தை யாரும் பெரிதாக்க தேவையில்லை என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் பிரச்சாரம் செய்ய வேண்டாம்.. தவெக எடுத்த அதிரடி முடிவு...