1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. writter perumal murugan complaint corruption in periyar arivulagam

கோவை பெரியார் அறிவுலகத்தில் ஊழல்! - எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டு

periyar
கடந்த திமுக ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது பெரியார் அறிவுலகம்.  கடந்த ஜனவரி மாதம் ரூ.40 கோடி ரூபாய் அளவுக்கு புத்தகங்களை கொள்முதல் செய்து அந்த நூலகங்களில் வைத்தார்கள். ஆட்சி மாறிய பின் முதலமைச்சரின் ஜோசப் விஜய் அந்த நூலகத்தை கடந்த அக்டோபர் 16ஆம் தேதி துறந்து திறந்து வைத்தார்..

இந்நிலையில் இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்கள் பல போலியானவை என எழுத்தாளர் பெருமாள் முருகன் பகிர் குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். அங்குள்ள பல தமிழ் புத்தகங்களில் இருக்கும் தரவுகள், தகவல்கள் போலியானவை.. அகல்விளக்கு என்கிற பெயரில் ஒரு பதிப்பகத்தை பார்த்தேன். அந்த பதிப்பகத்தின் கீழ் 1800 புத்தகங்கள் அங்கே இருக்கின்றன. ஆனால் 40 வருடங்களாக இலக்கியத் துறையில் இருக்கும் எனக்கு அப்படி ஒரு பதிப்பகம் இருப்பதே தெரியாது..

மேலும், நூல்களில் காணப்படும் பன்னாட்டு தர புத்தக எண்கள் பொய்யானவை.. 300 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தின் விலை ரூ.1445க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பிற பதிப்பகங்களில் அந்த் புத்தகத்தின் விலை ரூ.350 மட்டுமே.. இதில் நிறைய ஊழல் நடந்துள்ளது என அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.. மேலும் இந்த ஊழல் பணம் யாருக்கெல்லாம் போனது என்று அரசு கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் ராஜ்மோகன் ‘பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் வாங்க ஜனவரியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.. ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.. நூல்களில் இனிமேல் இதுபோன்று நடக்காமல் இருக்க கவனமுடன் செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம்’ எனவும் அவர் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் ஆகிறார் கேரள பெண் நித்ய் ராமன்.. தற்போதைய மேயரை வீழ்த்தி சாதனை...