1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Madras High Court Issues Notice on PIL Seeking Probe into Journalist Saurav Das's Identity and Documents

பத்திரிகையாளர் சௌரவ் தாஸிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! அதிரடி தகவல்...

சௌரவ் தாஸ்
பத்திரிகையாளர் சௌரவ் தாஸின் அடையாளச் சான்றுகள், பின்னணி மற்றும் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தக் கோரியும், குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவரது கடவுச்சீட்டு  மற்றும் ஆதார் அட்டையை ரத்து செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 
கடவுச்சீட்டு அதிகாரிகள், தனித்துவ அடையாள அதிகார அமைப்பு  மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு இந்நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
நீதித்துறை மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக சௌரவ் தாஸ் கருத்துகளை தெரிவித்ததாக கூறி, ஆர். கணேஷ் குமார் என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் டி. பிரசாந்த் ரெட்டி மற்றும் கௌஸ்துப் மேத்தா ஆகியோர் இந்த மனுவை உள்நோக்கம் கொண்டது என்றும், தேவையற்றது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளனர். 
 
மேலும், சௌரவ் தாஸின் சக ஊழியர் அசுதோஷ் ரன்கா இச்சம்பவத்தை சமூகத்திற்கு நேர்ந்த அவமானம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
கருத்து சுதந்திரம் மற்றும் நீதித்துறை விமர்சனங்கள் குறித்த விவாதங்களுக்கு மத்தியில், இந்த வழக்கின் பதிலளிப்பதற்காக ஆறு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? - முக ஸ்டாலின் சொன்ன பதில்