சென்னைக்கு செல்ல விமான கட்டணம் அதிரடி உயர்வு!.. பொதுமக்கள் அதிர்ச்சி..
பொதுவாக தீபாவளி பண்டிகை போன்ற விழா காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணம் மட்டுமல்ல.. விமான கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தி விடுகிறார்கள். அதுவும் இந்த தீபாவளிக்கு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.
தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி. சேலம், கோவை ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் செயல்படுகிறது. இதில், சென்னையிலிருந்து பலரும் தங்களின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்புவார்கள். அவர்களில் சிலர் விமான பயணத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.
இந்நிலையில்தான் சென்னைக்கு செல்லும் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்ல ரூ.17,639, மதுரையிலிருந்து சென்னைக்கு செல்ல ரூ.11,877, திருச்சியிலிருந்து சென்னைக்கு செல்ல ரூ.14,666, சேலத்திலிருந்து சென்னைக்கு செல்ல ரூ.13,098, கோவையிலிருந்து சென்னைக்கு செல்ல ரூ.6870, மும்பையிலிருந்து சென்னைக்கு செல்ல ரூ.11,808, புவனேஸ்வரிலிருந்து சென்னைக்கு செல்ல ரூ.26,209, அகமதாபாத்திலிருந்து சென்னைக்கு செல்ல ரூ.21,944, டெல்லியிலிருந்து சென்னைக்கு ரூ.15,100 எனவும் கட்டணம் உயர்ந்துள்ளது.