1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin reply to reporters about support to seeman

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? - முக ஸ்டாலின் சொன்ன பதில்

seeman stalin
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் ஏழு அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெக பக்கம் வந்துவிட்டனர். அதில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இரண்டு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களை வெற்றி பெற்றனர்.

அடுத்து திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆனால் தேதி தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கட்சியின் தலைவர் சீமான் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டிருக்கிறது..

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான் ‘எந்த கட்சியுடன் கூட்டணி இல்லாமல் இருக்கும் நான்தான் பொது வேட்பாளர்.. அம்பாசமுத்திரத்தில் வெற்றிபெற்று சட்டசபைக்கு செல்லவேண்டும் என ஆசைப்படுகிறேன். மற்ற கட்சிகள் என்னை ஆதரித்தால் நான் அதை ஏற்றுக் கொள்வேன்.. திமுக அப்படி அறிவிப்பார்களா என்று எனக்கு தெரியாது’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த திமுக தலைவர் மு க ஸ்டாலினிடம் ‘இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவு கொடுப்பீர்களா?’ என்று கேட்டதற்கு ‘முதலில் தேர்தல் தேதி அறிவிக்கட்டும்.. அதன்பிறகு அதுபற்றி முடிவெடுப்போம்’ என கூறினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
முதியோர் இல்லத்தில் மறைந்த பெரியம்மாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்....