1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk comment against mk stalin for his talk

ஆபாச பேச்சு.. இப்ப உருவ கேலி!.. முக ஸ்டாலின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு!...

mk stalin
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வருகிற 6 தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அந்த பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. முதல்வர் விஜய் ஏற்கனவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இந்த தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்களில் பேசினார்.

நேற்று மதுராந்தகம் தொகுதியில் பல கிராமங்களுக்கும் சென்று ரோட் ஷோ நடத்தி மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். நாளை தாராபுரத்தில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
திமுகவை பொறுத்தவரை ஏற்கனவே ஆ.ராசா, உதயநிதி, சேகர் பாபு, கனிமொழி போன்றவர்கள் பிரச்சாரம் செய்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலினும் 2 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார்.
நேற்று தாராபுர்த்தில் பேசிய ஸ்டாலின் ‘இந்த தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு இன்னொரு பேர் இருக்கு.. பெட்டி பாமா.. பல்டி பாமா. இந்த உருவத்தை வைத்துக்கொண்டு எப்படி அவர் பல்டி அடித்தார் என தெரியவில்லை’ என உருவகேலி செய்தார். இதையடுத்து, திமுக எப்போதும் ஆபாசமாக மட்டுமே பேசும்.. இப்போது உருவகேலியும் செய்ய துவங்கிவிட்டனர் என அரசியல் விமர்சகர்கள் பேச துவங்கிவிட்டனர். முக ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் புகாரளிப்போம் என அமைச்சர் சிடி நிர்மல்குமார் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
3 மணி நேரம் வெயிட் பண்ணி உதவி கேட்டார் விஜய்!.. நன்றி இல்லையா?.. பழனிச்சாமி அட்டாக்!..