1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin doing compaing in dharapuram

ஜனநாயகன்ல ஹீரோ.. ஆனா ஜனநாயகத்துக்கு வில்லன் விஜய்.. மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!...

mk stalin
முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று மதுராந்தகத்தில் ரோட் ஷோ செய்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று தாராபுரத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

நான் ஓட்டு கேட்டு வரல.. நியாயம் கேட்டு வந்திருக்கேன்.. ஒருத்தர்கிட்ட பெட்டி பெட்டியா பணத்தை திணிச்சனதால மக்களாகிய உங்ககிட்ட இந்த இடைத்தேர்தலை திணிச்சிருக்காங்க.. நீங்க கட்டின வரி பணத்திலதான் இந்த இடைத்தேர்தல் நடக்கப்போகுது.. நீங்க போட்ட ஓட்டை செல்லாத ஓட்ட மாத்திட்டாங்க. அந்த துரோகிக்கு நீங்கதான் பாடம் புகட்டனும்.

முதலமைச்சர் விஜய் பேசுறதெல்லாம் இல்லை.. கத்துறதுதான்.. சட்டமன்றம் ஆனாலும் சரி தெருவாக இருந்தாலும் சரி.. கத்துறதுதான்.. ஆனால் மீடியா மைக்க பார்த்தா மட்டும் அலர்ஜி.. ஜனநாயகன்னு ஒரு படம் நடிச்சாரு.. அந்த படத்துக்கு அந்த பேர வச்ச முதலமைச்சர் அதுல கதாநாயகனா நடிச்சிட்டு இப்ப ஜனநாயகத்தின் வில்லனா குதிரை பேரம் பேசி இந்த இடை தேர்தல்ல வர வச்சிருக்காரு..புதுசா ஆட்சிக்கு வந்திருக்காரு.. எப்படி ஆட்சி செய்யணும்னு கத்துக்குவார்னு பார்த்தா அதை விட்டுட்டு அடுத்த கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கிட்டு இருக்காரு.. இதுதான் மாற்றமா?’ என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஜேசனும்.. சிக்மாவும்!.. போட்டோவை தூக்கி காட்டிய விஜய்!.. செம வைரல்!...