1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. actor shah rukh khan appreciate smith machchar

உங்களால் நாடு பெருமை கொள்கிறது!.. நடிகர் ஷாருக்கான் பதிவு...

smith machchar
சில நாட்களுக்கு முன்பு ஃபிளை துபாய் விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி தாக்கி கத்தியால் குத்தி விமானத்தை வேகமாக தரை இறக்கி விபத்தை ஏற்படுத்த முயற்சி செய்த சம்பவம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமானத்தில் 174 பயணிகள் இருந்த நிலையில் விமானி ஸ்மித் மச்சார் காயப்பட்ட நிலையிலும், அவரின் திட்டத்தை முறியடித்து பயணிகளின் உதவியோடு  விமானத்தை துபாய் விமான நிலையத்தில் தரையிறக்கினார்

ஸ்மித் மச்சாரை ஒரு நிஜமான ஹீரோ என நாடே கொண்டாடுகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஸ்மித் வீடியோ காலில் அவரிடம் பேசி உடல் நலம் விசாரித்தார். அதேபோல இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இருவரும் ஸ்மித் மாச்சாரை பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ‘கேப்டன் மச்சார்.. மிகவும் முக்கியமான அந்த தருணத்தில் நீங்கள் உறுதியுடன் செயல்பட்டீர்கள். துணிச்சலுடன் சவால்களை எதிர்கொண்டு உயிரை பணயம் வைப்பது சுலபம் இல்ல. ஆனால், விமானத்தில் இருந்தவர்களை பாதுகாக்க நீங்கள் அதைச் செய்திருக்கிறீர்கள். நீங்கள் விரைவில் குணமடையை பிரார்த்திக்கிறேன். நாடு உங்களை நினைத்து பெருமை கொள்கிறது’ என பதிவிட்டிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
விமானி ஸ்மித் மச்சாரை நேரில் சென்று பாராட்டிய துபாய் இளவரசர்!.. வைரல் போட்டோ!..