ஸ்டாலினுக்கு நடந்தது உதயநிதிக்கும் நடக்கும்!.. அமைச்சர் ரமேஷ் காட்டம்..
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. 108 தொகுதிகள் வெற்றி பெற்றதால் மேலும் சில எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படவே திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் ஆதரவை பெற்று தவெக ஆட்சி அமைத்திருக்கிறது.
திமுக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆ ட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தார். ஆனால் 2026 தேர்தலில் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இது திமுகவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது..
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ் முக ஸ்டாலின் கூட எம்.எல்.ஏ ஆக முடியவில்லை. தந்தைக்கு நடந்த பாடத்தை வைத்துக்கொண்டு உணராமல் உதயநிதி ஆபாசமாக பேசுவது, அவதூறாக பேசுவது, கீழ்த்தரமாக இரட்டை அர்த்தத்தில் பேசுவது என தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் ஸ்டாலினுக்கு நடந்தது அடுத்த தேர்தலில் உதயநிதிக்கும் நடக்கும் எனக் கூறியிருக்கிறார்.