1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sekar babu explain about mk stalin talk

எங்க தலைவர் பெண்ணின போராளி!.. அவர் அப்படி சொல்லல!. சேகர்பாபு விளக்கம்!...

sekar babu
நேற்று தாராபுரத்தில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் முக ஸ்டாலின் தவெக ஆட்சியையும், முதலமைச்சர் ஜோசப் விஜயின் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
அப்போது, தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது..

பாமாவுக்கு மற்றொரு பெயர் உண்டு.. பெட்டி பாமா.. பல்டி பாமா.. இந்த உருவத்தை வைத்துக் கொண்டு அவர் எப்படி பல்டி அடித்தார் என்று தெரியவில்லை’ என ஸ்டாலின் பேசினார். இதையடுத்து ஸ்டாலின் உருவக்கேலி செய்தது தவறு என பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன..

தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் ஸ்டாலினின் பேச்சுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். மேலும், ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல்குமார் போன்ற தவெக அமைச்சர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். உருவக்கேலி செய்த முக ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்போம் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ‘எங்க தலைவர் பெண்ணினத்தின் பேரொளியாக திகழ்பவர்.. தேர்தல் பரப்புரையில் அந்த வேட்பாளர் செயலுக்காக பயன்படுத்தி சொல்தானே தவிர.. அது அந்த வேட்பாளர் பற்றிய தனிப்பட்ட கருத்து அல்ல’ என்று கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஸ்மித் மச்சாருக்கு குவியும் நிதியுதவிகள்!.. Mankind Pharma ஒரு கோடி பரிசு அறிவிப்பு..