1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. thirumavalavan explain why vck quit dmk

கூட்டணியை விட்டு போக சொன்னதே ஸ்டாலின்தான்!.. திருமாவளன் இப்படி சொல்லிட்டாரே!...

thirumavalavan
திருமாவளவனின் விடுதலை சிறுத்தைக் கழகம் கடந்த பல தேர்தல்களிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மிகவும் அரிதாக மட்டுமே அதிமுகவுடன் விசிக கூட்டணி வைத்தது. ஒருமுறை விஜயகாந்துடன் இணைந்து மக்கள் நலக் கூட்டணி என தனியாக பயணித்தது. மக்கள் நல கூட்டணி தோல்வி அடைந்ததால் அதன் பின் 2026 சட்டமன்றத் தேர்தல் வரை விசிக திமுக கூட்டணியில் இருந்தது..

ஆனால் தொகுதிக்கான பேச்சுவார்த்தையில் விசிகவை திமுக அவமானப்படுத்தியதாக சொல்லப்பட்டது. மேலும், திருமாவளவன் கேட்ட தொகுதிகளை திமுக கொடுக்கவில்லை. இதை திருமாவளவன் மேடைகளில் கூறினார். சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியமைக்க விசிகவும் ஆதரவு கொடுத்தது. தற்போது தவெக கூட்டணியில் விசிக இருக்கிறது..

இந்நிலையில், நேற்று ஒரு விழாவில் பேசிய திருமாவளவன் 2011, 2014 தேர்தலில் திமுகவுடன் இருந்தேன். 2016 தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேறுவதற்கு நாங்கள் காரணம் இல்லை, நாங்கள் 180 முதல் 200 இடங்களில் தனித்து போட்டியிட முடிவு செய்திருக்கிறோம்.. நீங்கள் இந்த கூட்டணியில் தொடர வேண்டாம்.. வேறு கூட்டணிக்கோ, வேறு வழிக்கோ போகலாம் என முக ஸ்டாலின் சொன்னார். அதன் காரணமாகவே நாங்கள் வெளியேறினோம்’ எனக்கூறியிருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இந்து சமய அறநிலையத்துறை பெண் ஊழியர்களுக்கு 1 வருடம் மகப்பேறு விடுப்பு.. அதிரடி உத்தரவு...